
Alyssa Healy Records: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை அலிசா ஹீலி படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் சோபனா மோஸ்டரி 66 ரன்களையும், ருபியா ஹைதர் 44 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ஃபீல்ட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் அபாரமாக விளையாடிய அலிசா ஹீலி தனது 7ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினர்.