
இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அந்த அணிக்கு கடந்த ஒரு மாதத்தில் திடீரென எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்க ஆரம்பித்து, தற்பொழுது ஒரு அணியாக அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டிய ஆரம்ப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் காயம் அடைந்து தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடாதது பெரிய பின்னடைவாக தற்பொழுது மாறி இருக்கிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இரண்டுக்கு மூன்று என ஆஸ்திரேலியா இழந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
மேலும் அந்தத் தொடரில் விளையாடாத நட்சத்திர வீரர்கள் அனைவரும் தற்பொழுது இந்திய தொடரில் இடம் பெற்று இருக்கிறார்கள். இப்பொழுது தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும். மேலும் காயத்திலிருந்து வந்த வீரர்கள் அனைவரும் பழைய நிலைமைக்குத் திரும்பி ஒரு அணியாக கட்ட அமைய வேண்டும்.