PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது.
இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.
Trending
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்த. இதனையடுத்து முதலில் களம் இறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார்.
கேப்டன் பாபர் ஆசம் 46 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும், ஜோஸ் இங்க்லிஸ் 24 ரன்களும் அடித்தனர்.
இதன்மூலம் அந்த அணி 19.1 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்தது. இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ரேலிய அணி பாகிஸ்தானை வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now