
IND vs AUS: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! (Image Source: Google)
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவரிசையில் ஆசிய அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடின.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இத்தொடர் முடிந்து இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.