Advertisement
Advertisement
Advertisement

ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 15, 2024 • 01:56 PM

நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையிலும், அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 15, 2024 • 01:56 PM

மேற்கொண்டு இத்தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் உள்ளிட்ட வீரார்கள் வரிசையில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 

Trending

அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்தார். 

மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாடிய கூப்பர் கானொலி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ளார். மேற்கொண்டு நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக இடம்பிடித்திருந்த மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்ச் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஸ்மி ஷார்ட், , மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement