Advertisement
Advertisement
Advertisement

நடுவரை ஆபாச வார்த்தையில் திட்டிய ஆரோன் ஃபிஞ்ச் - ஐசிசி நடவடிக்கை!

டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

Advertisement
Australia skipper Aaron Finch Breaches Article 2.3 Of ICC Code of Conduct Against England
Australia skipper Aaron Finch Breaches Article 2.3 Of ICC Code of Conduct Against England (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2022 • 06:13 PM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2022 • 06:13 PM

அந்த ஓவரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லருக்கு பேட்டில் பந்து ஊரசியது போல இருந்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடுவரிடம் ஆரோன் பிஞ்ச் முறையிட்டார். அப்போது ஆபாச வார்த்தையில் பேசினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.

Trending

ஐசிசி நடத்தை விதி 2.3-ஐ பிஞ்ச் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும் அவர் அபராதத்தில் இருந்து தப்பித்தார். ஏனெனில் கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றம் இதுவாகும். ஆனால் ஐசிசி ஃபிஞ்சின் ஒழுங்குமுறை மீறியதாக ஒரு குறைபாடு புள்ளியை சேர்த்துள்ளது.

மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement