விண்டீஸ், வங்கதேச தொடரிலிருந்து விலகிய ஃபிஞ்ச்!
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து அடுத்த மாதம் வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். இதையடுத்து, அந்த அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஃபிஞ்ச் பங்கேற்கவில்லை.
Trending
இதனால் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி வாழிநடத்துகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடர்களிலிருந்து ஆரோன் ஃபிஞ்ச் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸில் 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய செல்லவுள்ள ஆரோன் ஃபிஞ்சிற்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக ஃபிஞ்ச் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now