
ஒவ்வொரு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு பிறகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி அறிவித்து வருகிறது. அந்தவகையில் தற்சமயம் இந்தியா - ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதேசமயம் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சர்வதேசா கிரிக்கெட் கவுன்சில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த இந்திய அணியானது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.
அந்தவகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 60.71 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், தோல்வியைத் தழுவிய இந்திய அணியானது 57.29 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியானது 59.29 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணி 50 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தொடர்கின்றனர்.