
Australia to play five-match T20I series against Bangladesh (Image Source: Google)
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கு தயாராகும் விதமாக அனைத்து கிரிக்கெட் அணிகளும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணியும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறுமென இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.