
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் இந்திய ஏ அணி இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதேசமயம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய ஏ மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
இதில் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையே இரண்டு நான்குநாள் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஆக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு நான்கு நாள் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.