Advertisement

வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த ஃபிஞ்ச்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்சிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement
Australia's Finch Undergoes Successful Surgery, Targets T20 World Cup Return
Australia's Finch Undergoes Successful Surgery, Targets T20 World Cup Return (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 13, 2021 • 04:13 PM

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச். இவர் அந்த அணியின் அதிரடி வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்துவருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 13, 2021 • 04:13 PM

இந்நிலையில் கடந்தமாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரின் போது ஆரோன் ஃபிஞ்ச் காயடமடிந்தார். இதனால் அந்த அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். 

Trending

அதன்பின் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்ற ஃபிஞ்ச், வங்கதேச தொடரிலிருந்து விலகினார். 

இந்நிலையில் தற்போது ஆரோன் ஃபிஞ்சிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிகளை அவர் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்குவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement