Advertisement
Advertisement

மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி!

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வான செய்தியை அறிந்து என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை, நான் சுமார் 10-15 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தேன் என அறிமுக வீரர் கூப்பர் கானொலி தெரிவித்துள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan July 16, 2024 • 21:12 PM
மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி!
மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி! (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.  அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி நேற்றியை தினம் அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாடிய கூப்பர் கானொலி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

Trending


இந்நிலையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியது குறித்து இளம் வீரர் கூப்பர் கானொலி மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வான செய்தியை அறிந்து என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை, நான் சுமார் 10-15 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தேன், அது ஒரு அதிசயமான தருணமாக இருந்தது. நான் இந்த நிலையை (சர்வதேச கிரிக்கெட்) அனுபவித்ததில்லை, எனவே டிராவிஸ் ஹெட் போன்ற சில தரமான வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்வது நன்றாக இருக்கும்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அணியின் மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் மற்றும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை நான் சரியாக பயன்படுத்திக்கொள்வேன். மேலும் எனது கிரிக்கெட் திறனுக்கு நான் இன்னும் பல வளர்ச்சியை வழங்க முடியும் என உணர்கிறேன். மேலும் இத்தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தது சற்று விசித்திரமாக இருந்தாலும், என்னால் முடிந்தவரை அதைப் பயன்படுத்த முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement