Advertisement
Advertisement
Advertisement

ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிறிஸ்டியன்!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட டேன் கிறிஸ்டியன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 21, 2023 • 11:52 AM
Australia's Veteran T20 Specialist Dan Christian To Retire At End Of BBL Season
Australia's Veteran T20 Specialist Dan Christian To Retire At End Of BBL Season (Image Source: Google)
Advertisement

பிரபல ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டேன் கிறிஸ்டியன். தற்போது 39 வயது டேன் கிறிஸ்டியன், ஆஸ்திரேலிய அணிக்காக 20 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் 405 டி20 போட்டிகளில் விளையாடி பிரபல டி20 வீரராக அறியப்பட்டுள்ளார். 

அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் 5,809 ரன்களும் 280 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட், ஆர்சிபி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

Trending


கடந்த 2010 முதல் இவர் இடம்பெற்ற அணிகள் 9 டி20 தொடர்களை வென்றுள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெறும் பிபிஎல் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேன் கிறிஸ்டியன் அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். இதனால் ஓய்வுக்குப் பிறகு லீக் போட்டிகளில் பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement