
AUSW vs INDW: Sneh Rana retains place in all three squads for Australia series (Image Source: Google)
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக மிதாலி ராஜும், டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவின் ஸ்நே ராணா மூன்று வடிவிலான அணியிலும் இடம்பிடித்துள்ளார்.