அதிர்ஷ்டத்தால் போல்ட் ஆவதில் இருந்து தப்பிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய காணொளி வைரலாகி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட்டும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் போல்டாவதில் இருந்து தப்பினார். அதன்படி இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை அக்ஸர் படேல் வீசிய நிலையில் அந்த ஓவரை கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்மித் பந்தை தடுத்து விளையாட முயற்சித்தார். அப்போது பந்து அவரின் பேட்டில் பட்டவுடன் பின்னோக்கி உருண்டு ஆஃப்-ஸ்டம்பின் அடிப்பகுதியைத் தாக்கியது. ஆனாலும் பந்தில் போதிய வேகமில்லாத காரணத்தால் பெயில்கள் விழவில்லை.
இதனை ஸ்டம்பிற்கு பின்னால் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் பார்த்து கொண்டிருந்த நிலையில், பந்து பட்டும் பெயில்கள் எவ்வாறு கீழே விலாமல் இருந்து என்பது புரியாமல் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, தன்வீர் சங்கா
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
Win Big, Make Your Cricket Tales Now