
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயதேயான இளம் வீரர் ஆயூஷ் மாத்ரேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் பெருமையைப் பெற்றுளார்.முன்னதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து, ஆயூஷ் மாத்ரே ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ஆயூஷ் மாத்ரே அதிரடியான அணுகுமுறையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக அஷ்வானி குமார் வீசிய இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஆயூஷ் மாத்ரே ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி தனது வருகையைப் பதிவுசெய்தார்.