Advertisement
Advertisement
Advertisement

PSL 2023: அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அசத்தல் வெற்றி!

கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 04, 2023 • 10:22 AM
Azam Khan shines in Islamabad's six-wicket win in Pakistan Super League
Azam Khan shines in Islamabad's six-wicket win in Pakistan Super League (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷர்ஜீல் கான் (8), ரோஸிங்டன் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, டயாப் தாஹிர் (19), ஷோயப் மாலிக்(12) ஆகியோரும் சொதப்பினர். அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் விளையாடிய கேப்டன் இமாத் வாசிம் அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்றார். 

Trending


இதில், 54 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். இமாத் வாசிம் கடைசி வரை களத்தில் நின்று பேட்டிங் செய்தாலும் அவரால் சதம் அடிக்க முடியவில்லை.இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதையடுத்து 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்து ஆடி 16 பந்தில் 34 ரன்களை விளாசினார். வாண்டர்டசன் 20 பந்தில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். ஃபஹீம் அஷ்ரஃப் 32 பந்தில் 41 ரன்கள் அடித்தார். 

பின்னர் 5ஆம் வரிசையில் களமிறங்கிய அசாம் கான், வழக்கம்போலவே அடித்து ஆடி அரைசதம் அடித்தார். கராச்சி கிங்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய அசாம் கான், 41 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இலக்கை அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். அவரது அதிரடியான அரைசதத்தால் 19.2 ஓவரில் இலக்கை அடித்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement