
ஆஸ்திரேலியாவை ஆட்டம் காணவைத்த நவீன், ஒமர்சாய் - வைரல் காணொளி! (Image Source: Google)
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அபாரமான முறையில் ஆஃப்கானிஸ்தான் அணி மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான அணி தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்து, ஐந்து விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 291 ரன்கள் குவித்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 143 பந்துகளில் 129 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசிக்கட்டத்தில் ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆஃப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்ஸாய் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள்.