
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் நடந்த டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் இரு தொடர்களையும் இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக பாகிஸ்தான் இழந்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை இந்தியாவின் விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மக்கள் பாபர் ஆசமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும். விராட்கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் மிகப் பெரிய வீரர்கள். பாகிஸ்தான் அணியில் இவர்களுடன் (விராட், ரோஹித்) ஒப்பிடக்கூடிய அளவுக்கு எவரும் இல்லை. நீங்கள் அவர்களை பேச சொன்னால் அவர்கள் பெரிய ராஜா. ஆனால் நீங்கள் அவர்களிடம் இருந்து முடிவுகளை கேட்கும் போது அவை பூஜ்ஜியமாக உள்ளது என்றார்.