ஐசிசியின் இரு விருதுகளைத் தட்டிச்சென்ற பாபர் ஆசாம்!
2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
அதன்படி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய பிரிவுகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பரிந்துரைக்கப்பட்டிருந்தர்.
Trending
இவரும் கடந்த் 2022ஆம் வருடம் அனைத்து வகை போட்டிகளிலும் 2,000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர் ஆஸம். 44 ஆட்டங்களில் 2598 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 54.12. 2022-ல் மட்டும் 8 சதங்களும் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வான பாபர் ஆஸம், 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராகவும் ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் எடுத்தார். இதனால் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் வருடம் முழுக்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராகவும் பாபர் ஆசாம் தேர்வாகியுள்ளார். இதையடுத்து சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now