
பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் பாபர் ஆசாம். மேலும் அணியின் கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள பாபர் ஆசாம், கடந்த சில மாதங்களாகவே தனது கேப்டன்சிக்காகவும், பேட்டிங் யுக்திகாகவும் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் விலகினார்.
ஒருநாள் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி 9 லீக் ஆட்டங்களில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. மேற்கொண்டு பாபர் ஆசாமி அஸாமின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. அவர் 9 போட்டிகளில் 82.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 320 ரன்கமை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் முடிந்த உடனேயே, அவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தானின் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இருவரது கேப்டன்சியின் கீழும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பாபர் ஆசாமை இந்த ஆண்டு ஏப்ரலில் டி20 சர்வதேசப் போட்டியில் மீண்டும் கேப்டனாக நியமித்தது. இருப்பினும், பாபர் இதுவரை இந்த முடிவை நியாயப்படுத்தத் தவறிவிட்டார். அவரது தலைமையின் கீழ், அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரை வென்றாலும், அதற்கு முன் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் சமன் செய்தது.