
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக காம்ரன் குலாம், சஜித் கான், நோமன் அலி ஆகியோருக்கு இப்போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றியிலும் பங்காற்றினர். இதில் காம்ரன் குலாம் சதமடித்தும், நோமன் அலி 20 விக்கெட்டுகளையும், சஜித் கான் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதேசமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனோ பாபர் ஆசாம் தொடர்ச்சியாக சொதப்பியதன் கரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல்களும் வெளியாகி வந்தன.