Advertisement

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 11, 2023 • 01:29 PM

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 8 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 11, 2023 • 01:29 PM

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் சொந்த மண் திரும்பிய பின், கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் ஆசாம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் போதிய ஒத்துழைப்பு பாபர் ஆசாமிற்கு இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் பாபர் ஆசாம் கேப்டன்சியை காட்டமாக விமர்சித்து வந்தனர்.

Trending

இதன் காரணமாகவே பாபர் அசாம் கேப்டன்சி பதவியை துறக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பாபர் அசாமுடன் நெருக்கமான இருக்கும் முன்னாள் வீரர்கள் பலரும், அவரை கேப்டன்சியில் இருந்து விலகவே அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது பாபர் அசாம் பேசுகையில், உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தானுக்கு திரும்பிய பின் என்ன நடக்கிறது என்பதை பார்த்து பொறுத்திருந்து முடிவு எடுக்கப்படும். ஆனால் எனது கவனம் முழுக்க இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தான் இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement