Advertisement

சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்!

என்னுடைய முதல் இந்திய பயணத்தில் சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்காகவும் விருப்பமாகவும் இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். 

Advertisement
சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்!
சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 26, 2023 • 05:16 PM

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான அணியாக கருதப்படுவது பாகிஸ்தான் அணியாகத்தான் இருக்கிறது. காரணம் அந்த அணியின் திறமை என்பது மட்டும் கிடையாது. இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் காரணங்களால், பாகிஸ்தான் அணி ஏழு வருடத்திற்கு பிறகு இந்தியாவிற்கு ஒரு உலகக் கோப்பையை விளையாட வருகிறது என்பதால்தான்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 26, 2023 • 05:16 PM

மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகத்தில் எங்கு மோதிக்கொண்டாலும் அந்தப் போட்டி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு போட்டியாகத்தான் இருக்கும். போட்டியின் தாக்கம் போட்டி முடிந்து ஒரு வாரம் நீடிக்கும் அளவுக்கு இருக்கும். இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பையில் இந்தியாவில் வைத்து மோதிக் கொள்கிறார்கள் என்றால், அது விளையாட்டு உலகில் மிக முக்கியமான ஒரு போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது.

Trending

இதன் காரணமாக உலகக்கோப்பையில் இந்த ஒரு போட்டியை மட்டும் எதிர்பார்த்து பல கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கான பலமான பாதுகாப்பான ஏற்பாடுகளை இந்தியா செய்து தயார் நிலையில் தற்பொழுது வைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணி இன்று தங்கள் நாட்டில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக 9 மணி நேரங்கள் எடுத்து, நாளை புதன்கிழமை இந்தியா வந்தடையும் என்று மிக நம்பிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தன்னுடைய முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது . அதனைத்தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக உலகக்கோப்பையில் முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்தியா கிளம்புவதற்கு முன்னால் பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடம், பாகிஸ்தான் அணி நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பையில் டாப் 4 அணிகளில் ஒன்றாக வருமா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாபர் அசாம் “எங்கள் அணிக்கு டாப் 4 என்பது மிகவும் குறைவான ஒன்று. என்னுடைய முதல் இந்திய பயணத்தில் சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்காகவும் விருப்பமாகவும், இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement