
ஐசிசி ஆடவர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 1000 நாட்களுக்கு மேல் முதலிடத்தை தக்கவைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய டி20 சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 தரவரிசையில் 1,013 நாட்கள் நம்பர் 1 பேட்டராக இருந்த நெடுநாள் சாதனையை பாபர் ஆசம் முறியடித்துள்ளார்.
தற்போது தரவரிசையில் பாபர் அசாம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 794 ரேட்டிங் புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தானை எட்டியதில் பாபர் ஆசம் முக்கிய பங்கு வகித்ததார். கடந்த ஆண்டு ஆட்டத்தின் 29 டி20 போட்டிகளில் விளையாடிய பாபர் ஆசம் 939 ரன்கள் குவித்திருந்தார்.
இதற்கிடையில், விராட் கோலி இந்த ஆண்டு 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் மற்றும் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ளார். கோலி தனது இயல்பான ஆட்டத்தை விளையாடுவதற்கும், அனைத்து வடிவங்களிலும் பெரிய ஸ்கோரை உருவாக்குவதற்கும் சிரமப்பட்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் 300 ரன்களை கூட கோலி கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.