
பாகிஸ்தான் அணி சமீபத்தியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலைலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிவரும் நவம்பர் 04ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரும், நவம்பர் 14ஆம் தேதி டி20 தொடரும் நடைபெறவுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி அங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 24ஆம் தேதி முதலும், டி20 தொடரானது டிசம்பர் 1ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.