
ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிதாக இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை வஙக்தேசஅணியின் துவக்க ஆட்டக்காரர் முகமதுல் ஹசன் ஜாய் நிதானமாக எதிர்கொண்டு 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு முனையில் நின்று அதிரடி காட்டிய நஜ்முல் ஹுசைன் 175 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதமூலம் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் நிஜாத் மசூத் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியின் இபாதத் ஹுசைன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் அணிக்கு இந்த முறையும் சதம் அடித்து நஜ்முல் ஹுசைன் அசத்தினார்.