
Bangladesh vs India Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், வங்கதேச அணியும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருப்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BAN vs IND ICC Champion Trophy 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- வங்கதேசம் vs இந்தியா
- இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
- நேரம் - பிப்ரவரி 20, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)