Advertisement

BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

Advertisement
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 01, 2023 • 08:07 PM

நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 01, 2023 • 08:07 PM

இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Trending

பின் 7 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேசம் அணி 2ஆவது இன்னினஙஸை தொடங்கியது. அந்த அணி 26 ரன்கள் முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது. அணியின் தொடக்க வீரர்கள் மஹ்முதுல் ஹசன் 8 ரன்களுக்கும், ஸகிர் ஹசன் 17 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் 40 ரன்களில் மொமினுல் ஹக் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் முஷ்பிக்கூர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 3ஆவது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 205 ரன்கள் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணியில் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 104 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹிம் 43 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் நஜ்முல் ஹொசைன் 105 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த் கையோடு முஷ்பிக்கூர் ரஹிமும் 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடந்து வந்த மெஹிதி ஹசன் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 338 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 332 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 11 ரன்களுக்கும்,  டெவான் கான்வே 22 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த ஹென்றி நிக்கோலஸ் 2 ரன்களிலும், டாம் பிளெண்டல் 6 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 12 ரன்களுக்கும், கைல் ஜேமிசன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் ஒருபக்கம் டெரில் மிட்செல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் டேரில் மிட்செல் 44 ரன்களுடனும், இஷ் சோதி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் 219 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement