
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இரு அணி கேப்டன்களும் அறிவித்தனர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து ஸோர்ஸியுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.