BAN vs NZ: அன்று ஆஸி., இன்று நியூ.; தொடரை வென்று சாதனைப் படைத்தது வங்கதேசம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா ரன் ஏதுமின்றியும், ஃபின் ஆலன் 12 ரன்களிலும், டாம் லேதம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்
Trending
அதன்பின் களமிறங்கிய வில் யங் மட்டும் நிலைத்து நின்று விலையாடி 46 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 19.3 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மத் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியும் லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது நைம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மஹ்மதுல்லா அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, முதல் முறையாக அந்த அணிக்கெதிராக டி20 தொடரைக் கைப்பற்றியது.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மஹ்மதுல்லா 43 ரன்களைச் சேர்த்தார்.
Win Big, Make Your Cricket Tales Now