
BAN vs NZ: New Zealand bowled out by 60 runs (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இதில் வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல், கிராண்ட்ஹோம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் லேதம் - ஹென்றி நிக்கோலஸ் இணை சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடியது. பின் இருவரும் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைஃபுதீன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.