
BAN vs PAK 1st Test: Bad light forces early stumps as Bangladesh finish first day on top (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஷாம்ன் இஸ்லாம், சைஃப் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் தலா 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த கேப்டன் மொமினுல் ஹக்கும் 6 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் - லிட்டன் தாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.