
BAN vs PAK 2nd T20I: Pakistan beat Bangladesh by 8 wickets and seal the series by 2-0 (Image Source: Google)
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருபினும் நடுவரிசையில் இறங்கிய நஜ்முல் ஹொசைன் - அஃபிஃபி ஹொசைன் ஆகியோர் மட்டும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃபிரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.