
BAN vs PAK, 3rd T20I: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 82 ரன்களை எட்டிய நிலையில், சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை எடுத்திருந்த ஃபர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹசன் நவாஸ் 33 ரன்களையும், முகமது நவாஸ் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், நசும் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.