
BAN vs PAK: Mushfiqur Rahim rested for Pakistan T20Is (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது. அடுத்ததாக, சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி விளையாடுகிறது.
அதன்படி நவம்பர் 19 முதல் டி20 தொடரும் நவம்பர் 26 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் முக்கிய வீரராக திகழும் முஷ்பிக்கூர் ரஹிமிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஷாகிப் அல் ஹசன் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.