
BAN vs PAK : Pakistan finish at 167/5 with Mohammad Rizwan top-scoring with an unbeaten 78! (Image Source: Google)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் அங்கு நியூசிலாந்து அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின.
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பாபர் ஆசாம் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷான் மசூதும் 31 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.