
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று தாக்கவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுட் ஆட்டநாயகியா த் தேர்வு செய்யப்பட்டார். ஆட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்மன்ப்ரீத், இளம் வேகப்பந்துவீச்சாளர்களை பாராட்டினார்.