
Bangladesh Women vs Scotland Women Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேச மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து அணியானது முதல் முறையாக ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
BAN W vs SCO W World Cup Match: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேச மகளிர் vs ஸ்காட்லாந்து மகளிர்
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
- நேரம் - அக்.03 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)