வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபில் நடைபெற்ற டி10 தொடரில் வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைன் விளையாடினார். ஆனால் அந்தத் தொடரில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கடந்த 2023 செப்டம்பர் மாதம் ஐசிசி கண்டுபிடித்தது. அந்த தொடரில் நடுவர்கள் உள்பட, 7 வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுடன் சேர்ந்து அவர் பெரிய சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஐசிசி ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.
குறிப்பாக சூதாட்டம் செய்ததற்காக 750 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பெற்றதை அவர் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். அதற்காக நடத்தப்பட்ட விசாரணையின் போது ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு கொடுக்காமலும் அவர் எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளார். ஆனாலும் இறுதிக்கட்ட விசாரணையில் நசீர் ஹொசைன் தன் மீது வைக்கப்பட்ட புகார்களை ஒப்பு கொண்டதாக தெரிய வந்துள்ளது.
Trending
அதைத் தொடர்ந்து அவருக்கு சர்வதேசம் முதல் உள்ளூர் வரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அடுத்த 2 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் 2.4.3, 2.4.4, 2.4.6 ஆகிய 3 அடிப்படை விதிமுறைகளை மீறிய அவருக்கு 2 வருட தடை மட்டுமல்லாமல் கூடுதலாக 6 மாதங்கள் விளையாடுவதற்கு இடைக்கால தடையும் விதிக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது.
இதன் காரணமாக வரும் 2025 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை அவரால் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மொத்தத்தில் 115 போட்டிகளில் வங்கதேசத்திற்கு விளையாடிய பெருமை கொண்ட அவர் தற்போது அந்த அனைத்து நன்மதிப்புகளையும் இழந்துள்ளார். இது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now