
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறது. இப்போடியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஏற்கெனவே வங்கதேச அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்விடைந்த நிலையில் ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்யும் நோக்கோடு களமிறங்கியது.
அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் தமிம் இக்பால் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நமுல் ஹொசைன் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.