Advertisement

வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 16, 2024 • 08:36 PM

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 16, 2024 • 08:36 PM

இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. 

Trending

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான வங்கதேச அணியில் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்ததன் காரணமாக லிட்டன் தான் மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து லிட்டன் தாஸுக்கு மாற்று வீரராக அறிமுக வீரர் ஜக்கர் அலி அனிக் வங்கதேச அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அணியின் தலைமை தேர்வாளர் காஸி அஷ்ரஃப் ஹொசைன், “வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் லிட்டன் தாஸி சமீபத்திய செயல்திறனைக் கருத்தில் கொண்டு, அணியில் இரண்டு திறமையான தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாற்றத்தை செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), அனாமுல் ஹக், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், முஷ்ஃபிக்கூர் ரஹீம், தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷாகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஜக்கர் அலி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement