
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது.
இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்திருந்தன. இந்நிலையில் இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.