Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2024 • 01:55 PM

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அப்படி முன்னேறும் நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2024 • 01:55 PM

இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்கதே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

Trending

அதன்படி நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியில் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மஹ்முதுள்ளா, சௌமீயா சர்க்கார், முஸ்தஃபிசூர் ரஹ்மான் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் இளம் வீரர்களான தன்ஸிம் ஹசன் ஷாகிப், ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இடம் கிடைத்துள்ளது. 

மேற்கொண்டு ரிஸர்வ் வீரர்கள் வரிசையில் அஃபிஃப் ஹொசைன், ஹசன் மஹ்முத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் டி பிரிவில் இயம்பிடித்து வங்கதேச அணி ஜூன் 7ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக தங்கள் முதல் போட்டியை விளையாடவுள்ளது. அந்த குரூப்பில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகளும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜாக்கர் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் ஷாகிப். ரிஸர்வ் வீரர்கள்: அஃபிஃப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement