Advertisement

CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!

ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது.

Advertisement
Bas de Leede produces an all-round performance for the ages to take Netherlands to CWC23!
Bas de Leede produces an all-round performance for the ages to take Netherlands to CWC23! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 06, 2023 • 07:54 PM

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 8ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 06, 2023 • 07:54 PM

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்பிரைட் - மேத்யூ கிராஸ் இணை தொடக்கம் கொடுத்தனர் இதில் மேத்யூ கிராஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Trending

இதற்கிடையில் கிறிஸ்டோபர் மெக்பிரைட் 32 ரன்களிலும், ஜார்ஜ் முன்ஸி 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் மெக்முல்லனுடன் இணைந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ரிச்சி பெர்ரிங்டனும் தனது அரைசதத்தைக் கடந்தார்.

பின் 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 106 ரன்களில் மெக்முல்லன் ஆட்டமிழக்க, மறுபக்கம் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களை எடுத்திருந்த ரிச்சி பெர்ரிங்டனும் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மைக்கேல் லீஸ் ஒரு ரன்னுக்கும், கிறிஸ்டோபர் க்ரீவ்ஸ் 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் தாமஸ் மெக்கிண்டோஷ் அதிரடியாக விளையாடி 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாஸ் டி லீட் 5 விக்கெட்டுகளையும், ரியான் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதானமான தொடக்கத்தைக் கொடுக்க, மேக்ஸ் ஓடவுட் 20 ரன்களிலும், வெஸ்லி பரேஸி 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம்ஜித் சிங்கும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின் 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாஸ் டி லீட் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய நிடமனுரு, கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து குறைந்த ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய சாகிப் ஸுல்ஃபிகர் நிதான ஆட்டத்தை தொடர, அதிரடியாக விளையாடிய பாஸ் டி லீட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5 விக்கெட் மற்றும் சதமடித்த நான்காவது வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்தார். பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 123 ரன்களில் பாஸ் டி லீட் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ஸுல்ஃபிகர் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் நெதர்லாந்து அணி 42.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லந்தை வீழ்த்தி, நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement