
South Africa tour Of Pakistan: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.
தென் ஆப்பிரிக்க அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான அட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் தொடர் 12ஆம் தேதி முதலும், டி20 தொடர் அக்டோபர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் 4 முதலும் நடைபெறவுள்ளது.
அதிலும் குறிப்பாக இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஃபசிலாபாத்தில் உள்ள இக்பால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஃபசிலாபாத் கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.