
BBL 11: Hobert Hurricans beat Sydney Sixers by 44 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் - டி ஆர்சி ஷார்ட் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ வேட் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஷார்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ரன்களைக் குவித்தார்.