
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு குர்டிஸ் பேட்டர்சன் - ஜோஷ் பிலீப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பேட்டர்சன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஜோஷ் பிலீப் அரைசதம் கடந்த கையோடு 55 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அடுத்து வந்த கேப்டன் ஹெறிக்ஸ் ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 26 ரன்களிலும், சில்க் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. மெல்போர்ன் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.