
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஜோஷ் பிரௌன், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, மேட் ரென்ஷா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாம் ஹைன் - பெர்ஸன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரைஇ ஆட்டமிழக்காமல் இருந்த சாம் ஹைன் 73 ரன்களோடும், பெர்ஸன் 57 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.