
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிபிஎல் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியில் மார்ட்டின் கப்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து வந்த சாம் ஹார்பர் 22 ரன்னிலும், நட்சத்திர வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 10 ரன்களிலும், மேத்யூ 23 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பனும் மற்றொரு தொடக்க வீரரான ஷான் மார்ஷ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய மார்ஷ் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதற்கிடையில் சதர்லேண்ட் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.